அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்


அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
x
தினத்தந்தி 11 April 2025 10:05 AM IST (Updated: 11 April 2025 11:49 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

சென்னை,

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story