நடுக்கடலை ரசித்தபடி மீன் குழம்பை ருசித்த கனிமொழி எம்.பி...!

நடுக்கடலில் மீனவர்கள் சமைத்த உணவை கனிமொழி எம்.பி ருசித்தும் மகிழ்ந்தார்.
நடுக்கடலை ரசித்தபடி மீன் குழம்பை ருசித்த கனிமொழி எம்.பி...!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் மலைச்சாமி என்பவரின் மகன் சக்திவேல் "தூத்துக்குடி மீனவன்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். 11 லட்சம் சப்ஸ்கிரைபர்களை (Subscribers) கொண்ட இவரது சேனலுக்கு திமுக எம்.பி. கனிமொழி ஆரம்பகால முதலே ரசிகர் ஆவர்.

இந்த நிலையில், யூடியூபர் சக்திவேலுடன் உரையாட நினைத்த திமுக எம்.பி. கனிமொழி சக்திவேலை காண தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு சென்றார். அங்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழியை தூத்துக்குடி மீனவன் குழுவினர் கடலுக்கு அழைத்து சென்றனர்.

கைகளால் கடல் நீரினை வருடிய படி பயணத்தை அனுபவித்த கனிமொழி வலை மற்றும் கூண்டு வைத்து மீன் பிடிப்பது, பவளப்பாறைகள் நிலை, கடல் பயணம் குறித்து யூடியூபர் சக்திவேலுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் நடுக்கடலில் மீனவர்கள் சமைத்த மீன் குழம்பு உணவை கனிமொழி சாப்பிட்டு மகிழ்ந்தார்.

கடல் பயணத்தின் போது பவளப்பாறைகள் அழிந்து வருவதை நேரில் கண்டதாகவும், அதனை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக எம்.பி. கனிமொழி உறுதி அளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com