பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி நாளையுடன் (ஞாயிற்றுகிழமை) பணி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, தொடக்க கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், பள்ளிக்கல்வித்துறையின் புதிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

அதேபோல், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குனர் லதாவுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், பள்ளிக்கல்வித்துறையின் கரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று பணி ஓய்வு பெறுகிறார்கள். இதன்காரணமாக, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பும், நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினிக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கு, கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com