கன்னியாகுமரி: கல் குவாரி பள்ளத்தில் விழுந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு

இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி அருகே கல்குவாரியில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கல்குவாரி
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கல் குவாரி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

விபத்து- உயிரிழப்பு

கன்னியாகுமரி, மாவட்டம் விருசடி பகுதியில் நாகராஜ், டிராவிட் ஆகியோர் அதிவேகமாக பைக்கில் சென்றனர். அப்போது பைக் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் விழுந்தது. இதில் கல் குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி அந்த 2 இளைஞர்களும் உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஞ்சுகிராமம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com