கன்னியாகுமரி: தனியார் வங்கியில் ரூ.57.6 லட்சம் மோசடி- நகை மதிப்பீட்டாளர் மீது வழக்குப்பதிவு


கன்னியாகுமரி: தனியார் வங்கியில் ரூ.57.6 லட்சம் மோசடி- நகை மதிப்பீட்டாளர் மீது வழக்குப்பதிவு
x

நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஒருவர், பணிபுரிந்த காலத்தில் ரூ.57 லட்சத்து 61 ஆயிரம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி

திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரம் கே.எல்.என். காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கி கிளையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை நகை மதிப்பீட்டாளராக வேலை செய்தவர் செல்வம்(40). இவர் நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்.

இவர் இந்த வங்கியில் பணிபுரிந்த காலத்தில் ரூ.57 லட்சத்து 61 ஆயிரம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது வங்கியின் தணிக்கை ஊழியர்கள் தணிக்கை செய்த போது தெரிய வந்தது. தற்போது செல்வம் பணியில் இல்லை. மோசடி பணத்தை வங்கி நிர்வாகம் சார்பில் திரும்ப கேட்டால், அவர் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

இதுகுறித்து வங்கியின் மேலாளர் செந்தில்குமார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் செல்வம் மீது வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story