கன்னியாகுமரி: நடுக்கடலில் நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்


கன்னியாகுமரி: நடுக்கடலில் நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்
x

படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அதே கடல் பகுதியில் வேகமாக வந்த வெளிநாட்டு கப்பல் மீனவர்களின் 3 நாட்டு படகுகள் மீது மோதியது.

இதில், 3 நாட்டு படகுகளும் கடலில் கவிழ்ந்தன. படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் கடலில் மூழ்கின. வெளிநாட்டு கப்பல் மோதியதால் நாட்டு படகுகளில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். உடனடியாக அவர்களை மீட்ட சக மீனவர்கள் சேதமடைந்த 3 படகுகளை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். நடுக்கடலில் நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story