கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
சென்னை,
மதுரை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 23 மற்றும் 30-ந் தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் சார்லப்பள்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 07229), மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக சார்லப்பள்ளி செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து வரும் 24, 31 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12666), மதுரை, திண்டுக்கல் செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும்.
மதுரையில் இருந்து வரும் 21-ந் தேதி காலை 10.40 மணிக்கு கச்சிகுடா புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (07192), ஒரு மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக மதியம் 12.05 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






