கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
Published on: 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா தலம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரிய உதயமாகும் காட்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

விவேகானந்தர் மண்டபம்

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சென்றனர். இதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி கன்னியாகுமரி போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

---

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com