கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
Published on: 

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரியில் குவிந்தனர்

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதேபோல் விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் மகமூட்டம் காரணமாக சூரியன் உதயமாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் படகில் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

தீவிர கண்காணிப்பு

மேலும் அங்குள்ள காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com