கன்னியாகுமரி: ஆலய விழாவில் சோகம்; மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலி


கன்னியாகுமரி:  ஆலய விழாவில் சோகம்; மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலி
x

கன்னியாகுமரியில் ஆலய விழாவில் அலங்கார வளைவு அமைக்கும் பணியின்போது, மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலியானார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை என்ற கடற்கரை கிராமத்தில் ஆலய திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு, பெரிய அளவில் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்தது.

அப்போது, சிலர் இரும்பு ஏணி ஒன்றை எடுத்து கொண்டு சென்றபோது, அது மின்கம்பம் மீது உரசியுள்ளது. இதில், ஏணியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அது ஏணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் பாய்ந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.


Next Story