கன்னியாகுமரிபகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது
கன்னியாகுமரிபகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
Published on

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று காலை தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு தங்க கிரீடம், வைரக்கல் மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உற்சவ அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருளல், கொலுமண்டபத்தில் எழுந்தருளிய பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நவராத்திரி காலை 10 மணிக்கு விவேகானந்தபுரம் சக்கரதீர்த்த காசிவிசுவநாதர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் யானை மீது புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தை கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com