காரையாறு பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

ஆண்டுதோறும் மழைக்காலத்தில் பொதுமக்கள் சின்ன மயிலாறு பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
காரையாறு பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
Published on

விக்கிரமசிங்கபுரம்,

கிடப்பில் போடப்பட்ட காரையாறு பாலம் பணி மீண்டும் தொடங்கியதால் காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காணி பழங்குடியின மக்கள்

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை அடிவாரத்தில் சின்ன மயிலாறு பகுதியில் காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காரையாறு அணை அடி வாரத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றைக் கடந்துதான் சின்ன மயிலாறு பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் பொதுமக்கள் சின்ன மயிலாறு பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். அவ்வப் போது கயிறு கட்டியும், தற்காலிக தொங்கு பாலம் அமைத்தும் ஆற்றை கடந்து சென்றனர்.

இரும்பு பாலம்

தொடர்ந்து பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் ரூ.99 லட்சத்தில் காரையாறு- மயிலாறு இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே வருகிற மழைக்காலத்துக்கு முன்பாக காரையாறு- மயிலாறு இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 18-ந்தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

மீண்டும் தொடங்கியது

இதையடுத்து காரையாறு- மயிலாறு இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தக்க சமயத்தில் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழையும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளையும் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com