இந்திய செய்தித்தாள் நிறுவன தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு

இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராக 'தினத்தந்தி' குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய செய்தித்தாள் நிறுவன தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு.
Published on

சென்னை,

இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் 2026-27-ம் ஆண்டுக்கான தலைவராக 'லோக்மத் குழுமத்தின் செயல் இயக்குனரான கரண் ராஜேந்திர தர்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

87-வது பொதுக்குழு கூட்டம்

இந்திய செய்தித்தாள் நிறுவனம் (ஐ.என்.எஸ்.) என்பது நமது நாட்டில் உள்ள செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வெளியீட்டாளர்களின் உச்சபட்ச அமைப்பாகும். இந்த அமைப்பின் 87-வது பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது.

இந்திய செய்தித்தாள் நிறுவன தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு

இதில் இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் 2026-27-ம் ஆண்டுக்கான தலைவராக 'லோக்மத் குழுமத்தின் செயல் இயக்குனரான கரண் ராஜேந்திர தர்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உதவி தலைவராக 'அமர் உஜாலா' நிறுவனத்தை சேர்ந்த தன்மயி மகேஸ்வரி, துணை தலைவராக 'வனிதா' இதழின் ஹர்ஷா மாத்யூ, கவுரவ பொருளாளராக 'கிரிஷோபிகா' இதழின் ஆனந்த் நாத், பொதுச்செயலாளராக மேரி பால் தேர்வாகியுள்ளனர்.

செயற்குழு உறுப்பினராக சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தேர்வு

செயற்குழு உறுப்பினர்களாக 'தினத்தந்தி' குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'ஹெல்த் அண்ட் தி ஆன்டிசெப்டிக்' இதழின் எல்.ஆதிமூலம், 'தினகரன்' குழுமத்தை சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்பட 41 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com