கரன்சி குடிநீர் திட்ட தடுப்பணையை தூர்வார வேண்டும்

குன்னூல் கரன்சி குடிநீர் திட்ட தடுப்பணையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கரன்சி குடிநீர் திட்ட தடுப்பணையை தூர்வார வேண்டும்
Published on

குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணை ஆங்கிலேயர் காலத்தில் அப்போதைய குன்னூர் நகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப 43.7 அடி கொள்ளளவு கொண்டதாக கட்டப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பருவ மழை பெய்யாததால் ரேலியா அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 8 அடியாக நீர் மட்டம் இருந்தது. குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குன்னூர் நகராட்சி பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியது.அதன்படி கரன்சி குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

குன்னூரிலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் கரன்சியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதனடிப்படையில் சட்ட மன்ற உறுப்பினர் நிதி மற்றும் பிற நிதியுதவியுடன் கரன்சி குடிநீர் திட்டம் நீண்ட கால குடிநீர் திட்டமாக உருவாக்கப்பட்டது.

கரன்சி தடுப்பணையிலிருந்து பம்ப் செய்யப்படும் குடிநீர் கிரேஸ் ஹில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது எமரால்ட் கூட்டு குடிநீர் திட்டம் இருப்பதால் கரன்சி குடிநீர் திட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் கரன்சியிலுள்ள தடுப்பணை மண் நிரம்பி சேறும் சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பணையில் நிற்காமல் வீணாக செல்கிறது. எனவே கரன்சி குடிநீர் திட்ட தட்டுப்பணையை தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com