காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மும்முரம்

காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மும்முரம்
Published on

காரியாபட்டி பேரூராட்சியில் காரியாபட்டி பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராமல் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, டி.கல்லுப்பட்டி, கமுதி, கள்ளிக்குடிஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காரியாபட்டி முக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நரிக்குடி, மதுரை, திருமங்கலம், திருப்புவனம், முக்குளம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளி பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்பேரில் நேற்று பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணியை பேரூராட்சி தலைவர் செந்தில், பேரூராட்சிகளின் மதுரை மண்டல செயற்பொறியாளர் சாய்ராம், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், இளநிலை பொறியாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், ஒப்பந்தகாரர் விஜயகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com