கவுண்டம்பாளையம் தொகுதியில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டம் - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

செயற்கை நுண்ணறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘கற்க ஏ.ஐ.’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டம் - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on: 

கோவை,

கவுண்டம்பாளையம் தொகுதியில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டத்தை த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சரவணம்பட்டி வார்டில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அன்றாட வாழ்க்கை மற்றும் பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கூறுகையில், “எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான இடத்தைப் பெறும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். எனவே, நமது கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஏ.ஐ. குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த நோக்கில் இந்த முன்னெடுப்பு இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com