

பெங்களூரு,
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவை பிடிக்க கர்நாடக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரி, டெல்லி சிபிஐ-இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும்.