அமைச்சர் உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சந்திப்பு

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார்.
அமைச்சர் உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சந்திப்பு
Published on

சென்னை,

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த அவர், பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்" என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com