தூத்துக்குடியில் கார்த்திகை அகல் விளக்கு விற்பனை விறுவிறுப்பு

திருக்கார்த்திகை விழா டிசம்பர் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடியில் கார்த்திகை அகல் விளக்கு விற்பனை விறுவிறுப்பு
Published on

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இரவில், வீடுகள் தோறும் அகல்விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா வருகிற 3-ந் தேதி (3.12.2025) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தீபம் ஏற்றுவதற்கான அகல்விளக்குகளை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் அகல்விளக்குகள் தயாரிக்கப்பட்டு தூத்துக்குடிக்கு கொண்டு வந்து கடைகளில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிளிக்கூண்டு விளக்கு, தானேவிளக்கு, குபேர விளக்கு உள்ளிட்ட விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ரூ.10 முதல் ரூ.150 வரை விதவிதமான விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com