மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா.
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில், உள்ள மயில்வடிவ மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்னர், மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள், நெய்யால் நிரப்பப்பட்ட தீப குண்டலத்தில் மகா தீபத்தை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது பின்னர் சொக்கப்பானை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சிவஞான பாலைய சுவாமிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com