கார்த்திகை பூஜை

நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கார்த்திகை பூஜை நடந்தது.
கார்த்திகை பூஜை
Published on

நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும், நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி, முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். சர்வ அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவில் அருகே உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com