ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை விரத வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை விரத வழிபாடு நடந்தது.
ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை விரத வழிபாடு
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, காக்கையாடியில், ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கார்த்திகை விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில், சாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com