கார்த்திகை சோமவாரம், பிரதோஷ வழிபாடு

கார்த்திகை சோமவாரம், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கார்த்திகை சோமவாரம், பிரதோஷ வழிபாடு
Published on

கார்த்திகை மாத 3-ம் வார சோமவாரமும், பிரதோஷமும் நேற்று ஒரே நாளில் வந்தது. இதையொட்டி புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோவில், சாந்தநாத சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் சங்காபிஷேகமும், மாலையில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல முருகன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

இதேபோல் பெருங்களூரில் உள்ள வம்சோதாரகர் கோவில், திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில், திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சோமு சுந்தரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com