கார்த்திகை தீப விழா: விசாகபட்டினம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

கார்த்திகை தீப விழாவையொட்டி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயில்
Published on: 

சென்னை,

கார்த்திகை தீப விழாவையொட்டி, விசாகப்பட்டினம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விசாகப்பட்டினம் - திருவண்ணாமலை

”விசாகப்பட்டினத்தில் இருந்து நவம்பர் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 08579) மறுநாள் மாலை 5.50 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 23-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (08580) மறுநாள் மதியம் 2 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடைகிறது. 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (நவ.21) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X