கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம், வதந்திகளை நம்ப வேண்டாம் - மு.க. ஸ்டாலின்

தொடர் சிகிச்சையின் விளைவாக கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #Karunanidhi
கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம், வதந்திகளை நம்ப வேண்டாம் - மு.க. ஸ்டாலின்
Published on

சென்னை,

உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.

கருணாநிதிக்கு அவருடைய வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து தெரிந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று வருகிறார்கள்.

மருத்துவர்களின் கோரிகையை ஏற்று மக்கள் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர் சிகிச்சையின் விளைவாக கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரை கவனித்து சிறப்பாக சிகிச்சையளித்து வருகிறார்கள். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள், கழக தொண்டர்கள் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும். விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com