கருணாநிதி பிறந்தநாள் விழா

தியாகதுருகத்தில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்றா.
கருணாநிதி பிறந்தநாள் விழா
Published on

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், அவைத்தலைவர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி நிர்வாகி வி.எஸ்.மணி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பு இளங்கோவன், பெருமாள், கலியன், மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிச்சையம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, விவசாய அணி அமைப்பாளர் அழகுமுத்து, மாவட்ட மகளிர் அணி தலைவர் சுகன்யா நாராயணசாமி மற்றும் அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com