விழுப்புரத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா தொ.மு.ச. சார்பில் கொண்டாடப்பட்டது

விழுப்புரத்தில் தொ.மு.ச. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா தொ.மு.ச. சார்பில் கொண்டாடப்பட்டது
Published on

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் விழுப்புரம் பணிமனை எண் 2, 3 ஆகியவற்றில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கலந்துகொண்டு சங்க கொடியேற்றி வைத்து இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி அனைவரையும் வரவேற்றார். தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், துணைத்தலைவர் பெருமாள், பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பொருளாளர் இளங்கோ, நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவர் அணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், தொண்டரணி அமைப்பாளர் கபாலி, தொ.மு.ச. நிர்வாகிகள் ராமலிங்கம், பெருமாள், சங்கர், உதயகுமார், திருசங்கு, செல்வக்குமார், குமரேசன், சுப்பிரமணியன், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. பொருளாளர் ஜான்போஸ்கோ, அமைப்பு செயலாளர் வேலு ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com