கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா

சுரண்டையில் கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா நடந்தது.
கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா
Published on

சுரண்டை:

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுரண்டையில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அப்துல் காதர், அவைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகசாமி, முன்னாள் நகர செயலாளர் பூல்பாண்டியன், ஸ்டீபன் சத்யராஜ், அரசு ஒப்பந்தக்காரர் கரையாளனூர் சண்முகவேலு, சாமுவேல் மனோகர், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவி வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் கணேசன், இளைஞர் அணி முல்லை கண்ணன், கோமதிநாயகம், சசிகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com