‘கருணாநிதி ஒரு சரித்திரம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்

கருணாநிதி ஒரு சரித்திரம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘கருணாநிதி ஒரு சரித்திரம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

ஆலந்தூர்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு சரித்திரம். அறுபது ஆண்டுகாலம் தன்னை மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்தவர். தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் முக்கியமானவராய் திகழ்ந்தவர். கருணாநிதியிடம் ஈர்த்த விஷயம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உரிய மரியாதையை வழங்குபவர். நேரம் தவறாமை, எதிர் கருத்தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வது.

30 ஆண்டுகளாக கருணாநிதியுடன் உறவில் இருக்கிறேன். மற்றவர்கள் யாரும் தெரிவிக்காத கருத்துகளைகூட நான் தெரிவித்துள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறிய கருத்தைக்கூட கருணாநிதி நினைவுகூர்ந்தார். அந்த விஷயம் எனக்கும், கருணாநிதிக்கும், அவருடைய மகன் ஸ்டாலினுக்கும், மகள் கனிமொழிக்கும் மட்டும் தெரிந்த ஒன்று. அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com