கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

விளாத்திகுளம் பகுதியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
Published on

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பகுதியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி நினைவு தினம்

விளாத்திகுளத்தில் கருணாநிதி நினைவு தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பஸ்நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்பட்டத்திற்கு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் தலைமையில் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பஸ்நிலையம் முன்பு கருணாநிதியின் உருவப் படத்திற்கு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதூர் பஸ்நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சாயர்புரம்

ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க. மற்றும் சாயர்புரம் நகர தி.மு.க. சார்பாக சிவத்தையாபுரம், புளியநகர், நடுவக்குறிச்சி, சாயர்புரம் மெயின் பஜார் ஆகிய இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு கூட்டாம்புளியில் உள்ள அன்பு இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.

குறுக்குச்சாலை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, அன்புராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்காணி

ஸ்ரீவைகுண்டம் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் முக்காணி அலுவலகத்தில் கருணாநிதி உருவபடத்திற்கு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கோட்டாளம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜான்ரத்தினபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com