கருணாநிதி பிறந்த நாள் விழா- உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்துக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
கருணாநிதி பிறந்த நாள் விழா- உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
Published on

தூத்துக்குடி:

தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்துக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறந்தநாள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா, புதூர் சுப்பிரமணியன், மாடசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com