கரூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கரூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பால்மடை பட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 23). இவர் கடந்த 2024-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தங்க வேல் தீர்ப்பளித்தார். இதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக கேசவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com