கரூர்: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி விபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதி தங்கள் குழந்தையுடன் இன்று இரவு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தனர்.
குளித்தலை அடுத்த லாலாபேட்டை மேம்பாலத்தில் சென்றபோது சாலையில் எதிரே வந்த தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஒன்றரை வயது பச்சிளம் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






