கரூர் சம்பவம்: சிகிச்சை பெறுவோரின் விபரங்கள் வெளியீடு


கரூர் சம்பவம்: சிகிச்சை பெறுவோரின் விபரங்கள் வெளியீடு
x

நேற்று முன்தினம் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

கரூர்,

கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் நேற்று முன்தினம் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று மேலும் 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்படி மொத்தம் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 6 பேரில் 5 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story