கரூர் சம்பவம்: தமிழிசை சவுந்தரராஜன் சரமாரி கேள்வி


கரூர் சம்பவம்: தமிழிசை சவுந்தரராஜன் சரமாரி கேள்வி
x

காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மரணங்களைத் தடுத்திருக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை,

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக அவர் பேசியதாவது;

"ஒரு கூட்டத்தில் நியாயமாக தொண்டர்கள் கூட வேண்டும். முதலில் குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும். இந்த கரூர் சம்பவத்தில் தவெகவிற்கு இடம் கொடுப்பதிலிருந்து நேரம் நிர்ணயிப்பதிலிருந்து காவல்துறையினர் தடுமாற்றத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றனர். காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மரணங்களைத் தடுத்திருக்க முடியும்.

நம் மாநிலத்தில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா? தமிழ்நாட்டின் மீது அக்கறையில்லையா உங்களுக்கு? அதைப் பாரு இதைப் பாரு என்று திமுகவினர் சொல்கிறார்கள். முதலில் தமிழகத்தைப் பாருங்கள். துபாய் போய்விட்டார் துணை முதல்வர். பாஜக அமைத்த குழு எங்கு உண்மையை மக்களுக்கு நேரடியாகச் சொல்லிவிடுமோ? என்கிற பயம்தான் அவர்களுக்கு. தி.நகர் மேம்பாலத்துக்கு எதுக்கு உங்கள் எம்.எல்.ஏ. அன்பழகனின் பெயர் வைத்துள்ளார்கள்?"

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story