கரூர் சம்பவம்: உடனடியாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? - அரசு விளக்கம்


கரூர் சம்பவம்: உடனடியாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? - அரசு விளக்கம்
x
தினத்தந்தி 30 Sept 2025 6:02 PM IST (Updated: 30 Sept 2025 6:13 PM IST)
t-max-icont-min-icon

அதிக உயிரிழப்புகள் நடக்கும்போது ஆட்சியர் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம் என அதிகாரி தெரிவித்தார்.

சென்னை,

கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் குறிப்பாக, உயிரிழந்த 41 உடல்களுக்கும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை செயலர் கூறியதாவது;

”கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 220 மருத்துவர்கள், 165 செவிலியர்கள் உள்ளனர். நெரிசல் பற்றி அறிந்து சேலம், திருச்சி, திண்டுக்கலில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அதிக உயிரிழப்புகள் நடக்கும்போது ஆட்சியர் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம்.

இறந்தவர்களின் உடல்களை உடனே தரும்படி உறவினர்கள் கோரியதால் இரவிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை உடனுக்குடன் ஒப்படைக்கவே கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை நடந்தது. பிரேதப் பரிசோதனையை தாமதப்படுத்தி இருந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story