கரூர் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.
கரூர் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
Published on

சென்னை,

கரூர் நெரிசலில் இறந்த 41 பேரது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த சூழலில், கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி சீனி அகமது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com