கரூர்: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பிளஸ் 2 மாணவனின் வக்கிர செயல்


கரூர்: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பிளஸ் 2 மாணவனின் வக்கிர செயல்
x
தினத்தந்தி 24 Feb 2025 1:41 PM IST (Updated: 24 Feb 2025 3:59 PM IST)
t-max-icont-min-icon

காதலிப்பதாக அழைத்து 10ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம் தரங்கப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 படிக்கும் மாணவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

மாணவி கத்தி கூச்சலிட்டதால் மாட்டிக்கொள்வோம் என பயந்த அந்த மாணவன், கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. உடன் இருந்த நண்பர்களும் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவியின் கழுத்தை அறுத்த பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10-ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த பிளஸ் 2 மாணவர், கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story