கரூர் கூட்ட நெரிசல்: விசாரணைக்குப்பின் யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு


கரூர் கூட்ட நெரிசல்: விசாரணைக்குப்பின் யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு
x

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

சென்னை

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேவேளை, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை ஐகோர்ட்டு அமைத்துள்ளது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாகவும், நீதிமன்றம் குறித்தும் பிரபல யூடியூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். விஜய்க்கு கோர்ட்டில் அநீதி நடந்திருப்பதாகவும் மாரிதாஸ் குற்றஞ்சாட்டினார்.

நீதிமன்றம் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்து இடம்பெற்றிருந்ததாலும், கரூர் கூட்ட நெரிசல் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பியதாகவும் மாரிதாசிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். நீலாங்கரையில் உள்ள அவரிடம் வீட்டிற்கு சென்ற போலீசார் மாரிதாசை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், விசாரணைக்குப்பின் மாரிதாஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜர் ஆக வேண்டும் என்று மாரிதாசுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story