கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு

கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கரூர் கலெக்டர் வெளியிட்டுள்ள பதிவில், "கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள் - 04324 256306, Whatsapp - 7010806322" என்று தெரிவித்துள்ளார்.






