நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி - மத்திய மந்திரிகள் தகவல்

நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டு உள்ளன.
நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரை வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி - மத்திய மந்திரிகள் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அறிவுத்தொடர்பை மீண்டும் கண்டறியவும், கொண்டாடவும் வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் நவம்பர் 16-ந்தேதி முதல் டிசம்பர் 19 வரை என ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பரிய நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த தகவலை மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான் மற்றும் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தர்மேந்திர பிரதான் மலும் கூறுகையில், 'இந்தியா ஒரு நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக தொன்மகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள காசி தமிழ் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்' என்று தரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com