காஷ்மீர்: போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீரில் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீர்: போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அருகே ரங்கிரீத் பகுதியில் பாதுகாப்பு படையினர், நேற்று பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சண்டை நடந்ததில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாக போலீசாரின் டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே ஸ்ரீநகரின் புறநகர் பகுதியாக பந்த் சவுக் அருகே உள்ள ஜூவன் என்ற இடத்தில் போலீசாரின் ரோந்து வாகனம் நேற்று மாலை சென்றது. அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் இந்த வாகனத்தை குறி வைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த வாகனத்தில இருந்த 14 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 14 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 போலீசார் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. பயங்கரவாதிகளை தேடும் பணியை போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீரில் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கர தீவிரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன். வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com