கச்சத்தீவு திருவிழா: வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் நடைபெறுகிறது.
ராமேசுவரம்,
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு உள்ளது. ராமேசுவரம் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதனிடையே இந்த ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 - 70 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்தும், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது.






