காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து


காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து
x

கோப்புப்படம்

பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி-ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள வளத்தூர்-குடியாத்தம் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற 23-ந் தேதி பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story