காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா: முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்கள் வழங்கினார்

காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா ஊனமாஞ்சேரியில் இன்று நடைபெற்றது.
காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா: முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்கள் வழங்கினார்
Published on: 

சென்னை,

14-வது காவல் துணை கண்காணிப்பாளர்களின் (டிஎஸ்பி) பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் விஜய் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

2025-ம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்த 25 டிஎஸ்பிக்கள் பயிற்சி முடிந்து காவல்துறையில் இணைகின்றனர். இதில் 11 பெண் டிஎஸ்பிக்கள் மற்றும் 14 ஆண் டிஎஸ்பிக்கள் அடங்குவர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com