காவ்யா மாறன்-அனிருத் திருமணம் - முதல்-அமைச்சர் விஜய்க்கு அழைப்பு

அனிருத் இசையில் சமீபத்தில் 'ஜெயிலர்-2' திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
காவ்யா மாறன்-அனிருத் திருமணம் - முதல்-அமைச்சர் விஜய்க்கு அழைப்பு
Published on: 

சென்னை,

காதல் கிசுகிசு

ஆட்டம் போட வைக்கும் இசையால் இளசுகளை ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் சமீபத்தில் 'ஜெயிலர்-2' திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத்தின் காதல் குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. அதாவது பிரபல சினிமா தயாரிப்பாளரான கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் மவுனம் மட்டுமே பதிலாக இருந்து வந்தது.

அனிருத்-காவ்யா மாறன்

தற்போது இந்தப் பேச்சு அடுத்த கட்டத்தை எட்டி, இருவரும் திருமண வாழ்க்கையில் இணையத் தயாராகி இருக்கிறார்கள். அதாவது கிரீஸ் நாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது. அனிருத்-காவ்யா மாறன் திருமணம் முதலில் செஷல்ஸ் நாட் டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிரீஸ் நாடு தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.

கடற்கரைகள், அழகிய கட்டிடங்கள், கண்கவர் இயற்கைக் காட்சிகள் என உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட கிரீஸ், பிரமாண்டமான திருமண நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற இடமாக கருதப்படுகிறது. அந்தவகையில் அனிருத்-காவ்யா மாறனின் திருமணத்தை கிரீசில் நடத்திட இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளார்கள். இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள், இரு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். இதற்காக 4 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வரவேற்பு நிகழ்ச்சி

இந்த நிலையில், காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை கலாநிதி மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். முன்னதாக தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை கலாநிதி மாறன் சந்தித்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com