காயல்பட்டினம் காட்டுப்பகுதியில் முதியவர் பிணம்

காயல்பட்டினம் காட்டுப்பகுதியில் முதியவர் பிணமாக கிடந்தார்.
காயல்பட்டினம் காட்டுப்பகுதியில் முதியவர் பிணம்
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கொம்புத்துறை அருகே உள்ள காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தென் பாகம் கிராம நிர்வாக அதிகாரி மோகன் பிரபாகர் ஆறுமுகநேரி போலீசாரிடம் புகார்தெரிவித்தார். இதன் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவர் சிவப்பு கலரில் சட்டையும், நீள நிறத்தில் கால் சட்டையும் அணிந்திருந்தார். அருகில் கைலி ஒன்றும் கிடந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் யார்? என உடனடியாக தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com