கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மருத்துவமனையில் அனுமதி


கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மருத்துவமனையில் அனுமதி
x

வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதல் உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனைக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்படுவார்.அந்த வகையில், வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரத்த பரிசோதனைகள், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது.இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விரிவான விளக்கத்துடன் விரைவில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story