

சென்னை,
சென்னையில் மீன்வளம் மற்றும் நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:
கேரளாவில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இணைந்து, இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் தன்மை, நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழகத்திலும் கேரள மரபு வரவேண்டும். ரஜினிகாந்த் இனி 100 முறை சொன்னாலும் மக்கள் கேட்கபோவது கிடையாது. சினிமாவுக்கு கவுரவ வேடத்துக்கு சில காட்சிகள் இருப்பது போலவே அரசியலில் ரஜினி இருப்பார். ரஜினி நல்ல நடிகர். அவரை சிறந்த அரசியல்வாதியாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.