திருப்பூரில் மருத்துவ கழிவுகளுடன் வந்த கேரள லாரி சிறை பிடிப்பு

பல்லடம் அருகே மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
திருப்பூரில் மருத்துவ கழிவுகளுடன் வந்த கேரள லாரி சிறை பிடிப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில் தொடர்ச்சியாக கேரள மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும், அதில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். மேலும், குடோனில் உள்ள அனைத்து கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com